போதைப்பொருள் மற்றும் எட்டோமிடேட் பயன்பாட்டுடன் தொடர்புடைய வீதி விபத்துகள் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2023 – 2025 காலப் பகுதியில் போதைப்பொருள் மற்றும் எட்டோமிடேட் பயன்பாடு தொடர்பில் 38 வீதி விபத்துகள் இடம்பெற்றன. இவற்றில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் ரைம்ஸ் நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று புதன்கிழமை பதிலளித்த பொலிஸார் உயிரிழப்பை ஏற்படுத்திய 19 விபத்துகளில் 9 எட்டோமிடேட் பயன்பாட்டுடன் தொடர்புடையவை என்றும் மீதமுள்ள 10 விபத்துகள் போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடையவை எனவும் தெரிவித்தனர்.
போதைப்பொருள் சார்ந்த 38 விபத்துகளில், 2023ஆம் ஆண்டில் இரண்டும் 2024ஆம் ஆண்டில் ஏழும் 2025ஆம் ஆண்டில் 29 விபத்துகளும் பதிவாகின என்றும் தெரிவிக்கப்பட்டது.
எட்டோமிடேட் என்பது ‘கேபாட்ஸ்’ எனப்படும் மின்னணு ஆவியாக்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு மயக்க மருந்து ஆகும்.
