சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வருகைதந்த சில விமர்சனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அதற்கமைய, 7 விமானங்களை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திசை மாற்றி அனுப்பியுள்ளதாக சிவில் வானூர்தி சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், கப்டன் தமித்த ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு விமானங்கள் இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவானந்தபுரம் ஆகிய சர்வதேச வானூர்தி நிலையங்களுக்கு திசை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டார், சாஜா, அபுதாபி, புதுடெல்லி உள்ளிட்ட வானூர்தி நிலையங்களிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த வானூர்திகளே திசை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
