முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டி, காணி கொள்வனவு செய்தார் என்று கூறப்படும் வழக்கில் முன்னிலையாக தவறியமையை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
