மலேசியாவில் பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம்; இளம் ஆசிரியர் கைது!

மலேசியாவின் ஜொகூர் பாசிர் குடாங்கில் 12 வயது பள்ளி மாணவியை 28 வயது ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அசிரியரைக் கல்வி அமைச்சு உடனடியாகப் பணியிலிருந்து நீக்கியிருப்பதாகக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார். சம்மந்தப்பட்ட ஆசிரியரை பொலிஸார் கைது செய்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட 12 வயது ஆறாம் ஆண்டு மாணவி சமூகநலத்துறையின் பாதுகாப்பில் இருப்பதாகக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாகப் பல்வேறு தரப்பினர் ஊகங்களைப் பரப்பினாலும் பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படத்தையோ,, அவர் குடும்பத்தினரின் புகைப்படத்தையோ பொதுவில் பயன்படுத்த வேண்டாம் என கல்வி அமைச்சர் வலியுறுத்தினார். கைது செய்யப்பட்ட ஆசிரியரை பொலிஸார் விசாரித்து வருகின்றனர் எனவும் சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மாசாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2025 செப்ரெம்பர் மாதம் 28 வயது ஆசிரியர் 12 வயது பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும் பாசிர் குடாங் மாவட்டக் கல்வி இலாகாவால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இவ்வாண்டு மீண்டும் அதே ஆசிரியர் பணிக்குத் திரும்பியதும், சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles