கோலாலம்பூர் மருத்துவமனை சென்ற பிரதமர் நோயாளர்களை பார்வையிட்டார்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோலாலம்பூர் மருத்துவமனைக்கு வருகை தந்து, அதன் செயல்பாடுகளைக் கண்காணித்ததோடு, அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளையும் சந்தித்தார்.

இந்த வருகையின்போது நோயாளிகளைச் சந்தித்து அவர்களின் நலன்களை விசாரித்தார் எனவும் அன்வார் தனது முகநூல் பதிவில் தெருவித்துள்ளார்.

அவர்கள் குணமடையவும், அவர்களின் அனைத்துப் பிரச்சனைகளும் எளிதாகி, அவர்கள் தொடர்ந்து வலிமையுடன் ஆசீர்வதிக்கப்படவும் தாம் பிரார்த்திப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

பொதுமக்களைப் பராமரிப்பதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் செயல்படும் கோலாலம்பூர் மருத்துவமனை சுகாதாரப் பணியாளர்களுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் மக்களின் உயிர்களையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதில் பொறுமை, கருணை மற்றும் அளவற்ற தியாகத்துடன் தொடர்ந்து சேவையாற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றி என்று அவர் கூறினார்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles