மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் இருந்தவர் மரணம்!

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்டத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்பின்னரே, உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றும் அந்த மூத்த அதிகாரி கூறினார்.

முன்னதாக, கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான 4 பிள்ளைகளின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டார் என்று அவரின் மனைவி அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles