நவம்பர் மாதம் வரை எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உடனடி எரிபொருள் விலை திருத்தம் மற்றும் அச்சத்துடன் எரிபொருளை மக்கள் கொள்வனவு செய்வதையும் அது மறுத்துள்ளது.
இதனிடையே, சுமார் 90 ஆயிரம் மெற்றிக் தொன் கச்சா எண்ணெயுடன் இரு கப்பல்கள் நாளையும் எதிர்வரும் 31ஆம் திகதியும் நாட்டை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மே 31ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்படுகிறது என்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நெத்திகுமார கூறியுள்ளார்.
தற்போது, ஜூலை மாதம் வரை தேவையான பெற்றோல் கையிருப்பிலுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட மசகு எண்ணெய் விரைவில் நாட்டை வந்தடையும் எனவே, எரிபொருளை மக்கள் பதுக்க வேண்டிய தேவையில்லை.
தற்போதுள்ள கியூ. ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
