அநுராதபுரம் அட்டமஸ்தான விகாரைகளின் தலைமை பிக்குவால் சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தில் பொலிஸார் பக்கச்சார்பாக செயல்பட்டனர். இது தொடர்பில் விசாரணை வேண்டும் என்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் இன்று வெள்ளிக்கிழமை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டை அளித்தது.
இதனிடையே, அட்டமஸ்தான விகாரைகளின் தலைமை பிக்குவின் விடயத்தில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் புதன்கிழமை தொடக்கம் இன்றுவரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
