நாட்டின் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ‘அதிகாரிகள்’ பங்களா முன்பாக இன்று ஆறாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வெசாக் கால பகுதியில் அப்பகுதி முழுவதும் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
