சிங்கப்பூரில் அயல் வீடுகளில் உள்ள கிளிகள் பற்றி ஆண்டுதோறும் 800இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே நிலை நீடிப்பதாகத் தேசியப் பூங்காகழகம் கூறுகிறது.
கிளிகளின் கீச்சுக் குரல், அவற்றின் உடல் நலம் குறித்தே பெரும்பாலும் முறைப்பாடு செய்யப்படுகிறது.
அதனால் பக்கத்துக்கு வீடுகளுக்கு இடையே நட்பு கெடுகிறது. கிளிகளை வளர்ப்போர் ஒரு கட்டத்தில் அவற்றைக் கைவிட்டுவிடுகின்றனர்.
மக்களில் சிலருக்குக் கிளிகளைப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அவற்றை விரும்புவோரும் உள்ளனர்.
ஒருவருக்கொருவர் பேசிப் புரிந்துகொண்டால் இணக்கமான சூழல் ஏற்படும் என்று கிளி வளர்ப்போர் கூறுகின்றனர்.
