அமரர் தங்கம்மா சோமசுந்தரம்
வயது 88
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா சோமசுந்தரம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எனும் உயர்ந்த உறவை
நாம் இழந்து ஆறு ஆண்டுகள்
பறந்தோடிச் சென்றாலும்..
அமுதூட்டி அரவணைத்த அன்பு தாய்
எனும் அற்புதத்தைத் தொலைத்துவிட்டு
அன்பு நினைவுகளை மட்டுமே
சுமந்தபடி வாழுகின்றோம்..
விழிகள் களைப்படைந்து கண்ணீரில் மிதக்கின்றன
இறையருள் கொண்ட என் தாயே இரக்கப்பட்டா
இறைவனும் உன்னை எடுத்துவிட்டான்”
நீங்கள் மறைந்து ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும்
உங்கள் மிளா நினைவுகளுடனே
வாழுகின்றோம்..
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்: குடும்பத்தினர்
