‘ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’, என்று ஈரானின் மூத்த இராணுவ ஆலோசகர் மோஹ்சென் றீசாய் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கைகளுக்குப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
லெபனானை இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம் அழுத்தத்துக்கு உட்படுத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், எதிர்கால பிராந்திய உடன்பாடுகளில் லெபனான் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனத் தெரிவித்த அவர், எந்தவொரு புதிய மோதலும் வடக்கு இஸ்ரேலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதனால், ஏற்கனவே பதற்றமான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பெரியளவிலான மோதல் வெடிக்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
