கொழும்பு புறநகர் பகுதியான மீகொடையில் தானசாலையில் வரிசையில் நின்ற மக்கள் மீது கெப் வாகனம் மோதிய விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் விபத்தை ஏற்படுத்திய கெப் வாகன உரிமையாளரும் அடங்குவார்.
இதேவேளை, இந்த விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் தனது சட்டத்தரணி ஊடாக காவல் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் ஹோமாகம நீதிவான் முன்னிலையில் மீகொடை பொலிஸார் முற்படுத்திய நிலையிலேயே விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 31ஆம் திகதி நடந்த இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
