மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
