அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் சொத்துமதிப்பில் ஒரே நாளில் சுமார் 164.8 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளது. இது முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பைவிட இருமடங்கு அதிகம்.
ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவுநரான எலோன் மஸ்க், உலகில் முதன்முறையாக ஒரு டிரில்லியன் டொலர் சொத்து மதிப்பைப் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்கு வந்ததாலேயே, 1.3 டிரில்லியன் டொலருடன் எலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக ஆனார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியும் 4.15 டிரில்லியன் டொலராக உள்ள நிலையில், எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு மட்டும் இந்திய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட கால் பங்கை (25%) நெருங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 14.71 வீதம் உயர்ந்து, சுமார் 164.8 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13.8 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் (89.7 பில்லியன் டொலர்) ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிட இரு மடங்கு அதிகமாகும்.
