கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை ஹயேஸ் வான்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பெண் மீது அதே திசையில் பின்னால் வந்த ஹயேஸ் வான் மோதியதிலேயே குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயங்களுக்குள்ளான பெண் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொதுப் பணிகளில் முன்னின்று செயற்பட்டு வந்த முகாவில் பகுதியைச் சேர்ந்த திருமதி சந்திரன் சசிகலா (வயது- 49) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
