அம்பாறையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி அகழ்வு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த காணியில் மண் அகழ்வு பக்கோ இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு தடயப் பொருளும் கிடைக்கவில்லை என்பதுடன் அகழ்வு பணி நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்து வந்துள்ளதுடன் அங்கு அக்காலகட்டத்தில் புலிகளின் மார்க்கமாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஷ

இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 12 மணி வரை மேற்கொண்டபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதை அடுத்து அனைவரும் வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles