இடைத்தேர்தலில் த.வெ.கவுக்கு ஆதரவு – வைகோ அறிவிப்பு!

இடைத்தேர்தலில் த.வெ.கவுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று அதன் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதிமுகவின் 32ஆவது பொதுக்குழு இன்று நடைபெற்றது. இதுவரை நடந்த பொதுக்குழுவிலேயே சிறப்பு வாய்ந்த பொதுக்குழுவாக அமைந்திருக்கிறது. தேர்தல் முடிவின்போது அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தி.மு.க. ஆதரவு என தகவல் வெளியானது.

இது உண்மையாக இருந்திருந்தால் அரசியல் மோசடி. எனவே, தி.மு.கவுடன் தோழமையில் இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தோம். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் த.வெ.கவை ஆதரிப்போம். உள்ளாட்சித் தேர்தலிலும் த.வெ.க. உடன் தோழமை ஏற்படும் வகையில் நம் நடவடிக்கை அமையும்.

முதல்வர் விஜய்யிடம் நான் ரூ.50 கோடி வாங்கியதாக அபாண்டமாக பொய் பரப்புகிறார்கள். இந்த பொய் குற்றச்சாட்டு மீது வழக்கு தொடர உள்ளேன். கட்சிக்காக சொத்துகளை விற்றவன் நான். முன்பு ஜெயலலிதாவிடம் கோடிகோடியாக பணம் வாங்கியதாக பொய் பரப்பினார்கள். தி.மு.க. மீது விமர்சனம் வைத்தது இல்லை.

தி.மு.க. ஆட்சியை பாராட்டி இருக்கிறேன். சிறு விமர்சனம் கூட வைத்தது இல்லை. இனி தி.மு.கவுடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என முடிவுக்கு வந்துள்ளது ம.தி.மு.க. என் நேர்மை, நாணயம் எனக்கு தெரியும். பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடித்து வருகிறேன். கட்சிக்காக சொத்துகளை விற்றவன் நான். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles