“இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது” – அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்

“இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது, இந்தியா உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது; இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், இந்தியாவுடன் கூட்டாளியாகச் செயல்பட விரும்புகிறோம்.” என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், “இந்தியாவுடன் மற்றொரு பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிலைக்கு மிக அருகில் வந்துள்ளோம். இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விரும்புகிறது. இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது, இந்தியா உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது; இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், இந்தியாவுடன் கூட்டாளியாகச் செயல்பட விரும்புகிறோம்.

சில வாரங்களுக்கு முன்பு புது டெல்லியில் ஒரு அமைச்சருடன் நான் பேசியபோது அவர் என்னிடம் கூறியது, “இன்னும் 50 ஆண்டுகள் கழித்தும் நம் இரு நாடுகளும் நண்பர்களாகவே இருக்கும். நீங்கள் உலகின் பழமையான ஜனநாயகம், நாங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம். ஜனநாயகம் என்று வரும்போது நாம் ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்டுள்ளோம்; இதில் வலுவான எதிர்க்கட்சிகளும் அடங்கும். எல்லா நாடுகளிலும் இது இருப்பதில்லை. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல பொதுவான அம்சங்கள் உள்ளன; இதுவே நம்மைத் தொடர்ந்து இணைத்து வைத்திருக்கும்” என்று அவர் கூறினார்.

எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பல நல்ல வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம். செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் மற்றும் விமானப் போக்குவரத்து என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், இணைந்து செயல்படுவதற்கான ஆற்றல் எங்களிடம் உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைக்க நான் விரும்புகிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகள், எங்கள் உறவை நீண்ட காலப் பாதையில் கொண்டு செல்லும்” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles