சிங்கப்பூரில் இந்திய கடற்படைக் கப்பல்களுக்கு அமோக வரவேற்பு

இந்திய கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் அலோக் ஆனந்தா தலைமையில், இந்திய கடற்படைக் கப்பல்களான உதயகிரி, கவரத்தி, சக்தி ஆகியவை சிங்கப்பூர் சென்றடைந்தபோது அவற்றுக்கு அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் உற்சாக வரவேற்ப்பளித்துள்ளனர்.

இந்த உத்தியோகபூர்வ வருகையானது இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதோடு, இந்திய அரசின் ‘கிழக்கு நோக்கிய செயல்பாடு’ கொள்கை மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் நாட்களில் இரு நாட்டு கடற்படை வீரர்களும் பல்வேறு கடல்சார் கூட்டுப் பயிற்சிகள் மற்றும் தொழில்முறை ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதன் மூலம் இரு நாட்டு இராணுவ ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles