பாகிஸ்தான் கடலோரக் காவல் படை முகாம் மீது தாக்குதல் – 30 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோரக் காவல் படை முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், பாகிஸ்தானின் துணை இராணுவப் படையினர் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வெளிவந்துள்ள தகவல்களின்படி, கடலோரக் காவல் படை முகாமை குறிவைத்து இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 30 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுச் விடுதலை இராணுவம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் மூலம் கடலோரக் காவல் படை முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்றும், பாதுகாப்புப் படையினர் மத்தியில் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles