நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம் – அதிரடிப்படையினர் களத்தில்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகக் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை வளாகத்திற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இன்று (06) மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

நேற்று இடம்பெற்ற மோதலில் கைதிகள் இருவர் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று ஏற்பட்டுள்ள புதிய மோதல் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் கடும் முயற்சியால் நேற்று மாலை நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும், இன்று காலை மீண்டும் பதற்றம் மூண்டுள்ளது சிறைச்சாலை நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

தற்போது சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டனர் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles