சிங்கப்பூர் கபாசிர் ரிஸ் கடற்கரையில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட 24 வயது ஆடவர் இறந்துவிட்டார் எனக் பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை தெரிவித்தனர்.
நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதாகக் கூறப்பட்ட இதர ஏழு பேரும் சுயநினைவோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்கள் 13 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடற்கரையில் படகோட்டம், துடுப்புப் பலகை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை மின்னல் தாக்கியதாக நம்பப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5), 131 பாசிர் ரிஸ் ரோட்டில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அன்றைய தினம் மாலை 4.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்திருந்தது.
