கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் பலி!

கனடாவின் அல்பெர்ட்டா மாகாணம் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை அன்று மதியம் ஏற்பட்ட வீதி விபத்தில் ஸ்டோனி பிளெயின் பகுதியைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பொலிஸாரின் முதற்கட்ட தகவல்படி, வியாழக்கிழமை நெடுஞ்சாலை 627 மற்றும் நெடுஞ்சாலை 60 சந்திப்பில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அங்கு வந்த ஜீப் ரக வாகனம் ஒன்றும் பிக்கப் டிரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தின் போது ஜீப்பில் பயணித்த 69 வயது முதியவர் மற்றும் 64 வயது பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான பிக்கப் டிரக்கில் ஓட்டுநர் மட்டுமே இருந்துள்ளார்.

பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கனடிய பொலிஸார் மற்றும் அவசரக் கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles