செம்மணியில் இரு சிறார்களின் எலும்புக்கூடு உட்பட 8 எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இன்றைய தினம் புதிதாக சிறுவர்கள் இருவருடைய எலும்புக்கூடுகள் உட்பட 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட எலும்புக்கூட்டை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.

அதவேளை பெரிய எலும்புக்கூட்டிற்கு அருகில் சிறிய எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles