செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராகிலிருந்து 180 கி.மீ (112 மைல்கள்) தென்கிழக்கில் உள்ள நமெஸ்ட் நாட் ஒஸ்லாவோவில் உள்ள ராணுவத் தளத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதனால் மூன்று பேர் மிதமான காயங்களுடன் ப்ர்னோவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், லேசான காயங்களுடன் ஒருவர் ஜிஹ்லாவாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இராணுவம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிப்பில், “காயமடைந்த வீரர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் சாத்தியமான அனைத்து கவனிப்பையும் ஆதரவையும் வழங்குவதே இப்போது எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும்,” என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

“உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles