கனடாவில் 1.7 தொன் போதை மருந்து கடத்தியமை தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை வழியாக போதை மருந்து கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கனடா பொலிசார் ‘ புராஜக்ட் பே’ என்ற பெயரில் கண்காணித்து வந்தனர்.
அதில், அமெரிக்கா மற்றும் கனடா இடையில் செல்லும் லாரிகளில் கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் போன்ற போதை மருந்துகளை கடத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்ஹம் மற்றும் கலேடன் உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்த இந்த சோதனையில் 1.7 தொன் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக ககன்தீப் திண்டல், சிம்ரன்ஜித் சிங், கன்வர்பால் குலார், ஜதிந்தர்பால் சிங், ஜஸ்விந்தர் சோஹி, தேஜ்விந்தர் சந்து, ஹர்ஜ்விந்தர் சந்து, தர்மிந்தர் சிங், கன்தீப் தரிவால், மஹப்ரீத் சிங் மற்றும் கரன்தீப் சிங் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
