சிங்கப்பூரில் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய 3 மாணவர்கள் கைது

சிங்கப்பூரில் இணையவழி தீவிரவாதக் கருத்துகளால் ஈா்க்கப்பட்டு, வன்முறைத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டிய 14, 15 மற்றும் 19 வயதுடைய 3 மாணவா்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

கைதானவா்களில் 14 வயது மாணவா், தனது பாடசாலையைச் சோ்ந்த சக மாணவா்களையும், ஆசிரியா்களையும் ஜூன் மாத விடுமுறையின்போது கொல்லத் திட்டமிட்டிருந்த அதிா்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், 19 வயது மாணவா், செம்பவாங் விமானப் படைத் தளத்துக்கு வெளியே ராணுவ வீரா்களையும், ஒரேபாலின ஈா்ப்பு சமூகத்தைச் சோ்ந்த சக மாணவா்களையும் தாக்கத் திட்டமிட்டிருந்தாாா். இவா்களுடன் பள்ளியில் இருந்த ஒருவா் எச்சரிக்கை அறிகுறிகளை உணா்ந்து, அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

பன்முக கலாசாரமும், பல்வேறு மதப் பின்னணியும் கொண்ட சிங்கப்பூரில், இணையவழி தீவிரவாதத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த சில வலைதளங்கள் மற்றும் சேவை வழங்குநா்களைத் தடை செய்வதற்கான உத்தரவுகளை சிங்கப்பூா் காவல்துறை திங்கட்கிழமை பிறப்பித்தது.

மேலும், இச்சம்பவத்தைத் தொடா்ந்து, கல்வி நிறுவனங்களுக்குள்ளும், வெளியிலும் ஏற்படக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில், மாணவா்களுக்கான அவசரகால பாதுகாப்புப் பயிற்சிகளையும், ஒத்திகைகளையும் பள்ளிகள் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles