இந்திய, சீனப் பொருட்கள் மீது 100% வரி : மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை​ ஒப்புதல்

உக்​ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்​கொண்டு வரு​கிறார். போர் நடத்த ரஷ்யா​வுக்கு நிதி ஆதா​ர​மாக இருப்​பது அதன் கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வாயு ஆகிய வளங்​கள் ஆகும்.

எனவே, ரஷ்​யா​விடம் இருந்து பிற நாடு​கள் கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை தடுத்​து​விட்​டால், ரஷ்​யா​வுக்கு போர் நடத்​தத் தேவையான நிதி கிடைக்​காது என்று அதிபர் ட்ரம்ப் நினைத்​தார். இதையடுத்து ரஷ்யா மீது பொருளா​தார தடைகளை விதித்ததுடன், ரஷ்​யா​விடம் அதிக அளவில் கச்சா எண்​ணெயை இறக்குமதி செய்​யும் நாடு​களுக்கு அதி​க​மான வரியை விதித்து வருகிறார்.

அந்த வகை​யில், ரஷ்ய எண்​ணெயை வாங்​கும் இந்​தி​யா, சீனா மீது 100% கூடு​தல் வரி விதிக்க கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபை​யின் நடை​முறை வாக்​கெடுப்​பில் நடை​முறை​சார் வாக்​கெடுப்பு என்ற முறை​யில் நேற்று முன்​தினம் நிறைவேறியுள்ளது.

இந்த மசோதா தற்​போது இந்​தி​யா​வுக்​கும், சீனா​வுக்​கும் மிகப்​பெரிய சிக்​கலை ஏற்​படுத்தி உள்​ள​தாக பொருளா​தார நிபுணர்கள் தெரி​வித்​துள்​ளனர். இருப்​பினும் இந்த மசோதா அமெரிக்​கா​வில் சட்​ட​மாக வேண்​டும் என்​றால் பல்​வேறு கட்டங்களை தாண்ட வேண்​டிய கட்​டா​யம் உள்​ளது.

தற்​போது செனட் சபை​யில் ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்ள நிலையில், அதன்​பிறகு பிர​தி​நி​தி​கள் சபை​யில் வாக்​கெடுப்பு நடக்​கும். இந்த 2 சபைகளி​லும் பெரும்​பான்​மை​யுடன் இந்த மசோதா நிறைவேற வேண்​டும். அதன் பின்​னர்​தான் இந்த மசோதா அதிபர் டொ​னால்டு ட்ரம்​பின் ஒப்​புதலுக்கு செல்​லும். இதைத் தொடர்ந்து அவர் அனு​மதி வழங்​கும்​பட்​சத்​தில் வரி விதிப்பு தொடங்​கும்.

இந்த மசோதா நிறைவேற்​றப்​பட்​டால் இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட 5 நாடு​கள் கடும் பாதிப்​பைச் சந்​திக்​கும் எனத் தெரி​கிறது. ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வா​யுவை அதி​கம் இறக்குமதி செய்​யும் இந்​தி​யா, சீனா, ஸ்லோ​வாக்​கி​யா, ஹங்​கேரி, அஜர்​பைஜான் ஆகிய 5 நாடு​கள் மீது 100% வரி விதிக்க இந்த மசோதா பரிந்​துரைக்​கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles