பொதுநலவாய விளையாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை வீரர்

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கிளாஸ்கோவிலுள்ள ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தனது இரண்டாவது முயற்சியில் 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்த ருமேஷ் தரங்க, தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று சனிக்கிழமை காலை நிறைவடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், பொதுநலவாய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இலங்கை வென்றுள்ள 6ஆவது தங்கப் பதக்கத்தை ருமேஷ் தரங்க பெற்றுத் தந்துள்ளார்.

மேலும், 2006ஆம் ஆண்டு பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்ற பின்னர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கமாகவும் இது பதிவாகியுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles