தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டையர்களே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம் வீட்டில் யாரும் இல்லாதவேளை தமக்கு தாமே தீ மூட்டியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று அதிகாலை உயிரிழந்தனர்.

வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்தனர் என அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னம் வாக்குமூலம் வழங்கினர் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles