ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல்போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது; அவசரகாலக் குழுக்கள் தற்போது சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
மலைப்பகுதியின் பல இடங்களில் நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் நிலவரத்தைக் கண்காணித்து வரும் அதிகாரிகள், மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
