மலேசியாவில் கட்டடத்தின் நடைபாதை அமைப்பு இடிந்து வீழ்ந்ததில் இலங்கை தம்பதியர் காயம்

மலேசியாவின் பினாங்கு, லெபூ ஆர்மேனியனில் கடை கட்டடத்தின் மரக்கட்டை மற்றும் கற்கள் இடிந்து விழுந்ததில் இலங்கையைச் சேர்ந்த கணவன், மனைவி காயமடைந்துள்ளனர்.

குடும்பத்தினருடன் நடந்து சென்றபோது, கட்டிடத்தின் முதல் மாடிப் பகுதியிலிருந்த நடைபாதை அமைப்பு திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது.

40 மற்றும் 50 வயதுடைய இருவரும் அம்புலன்ஸ் மூலம் பினாங்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

மதியம் 1.11 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles