நெடுந்தீவு கடலில் சிக்கிய 11 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது.

இந்தப் படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனர்த்தத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில், குறித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை ஆரம்பித்தது.

அதனடிப்படையில் நீண்ட முயற்சியின் பின்னர் இன்றைய தினம் குறித்த 11 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் மீட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வந்தனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, கடல் கொந்தளிப்பால் கரையொதுங்கிய இழுவைப் படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles