குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழப்பு; 13 பேர் காயம்

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச் சாலையில் கைதிகளுக்கிடையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாகக் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட 15 பேரில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு குருவிட்ட சிறைச் சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மீண்டும் கைதிகளால் கலவரம் மற்றும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மோதலின் போது கைதிகளால் சிறைச்சாலை வைத்தியசாலை தாக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமையை முழுமையாகக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகப் பொலிஸாரால் கண்ணீர்புகைத் தாக்குதலும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் முப்படையினரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு குருவிட்ட சிறைச்சாலை வளாகத்தில் தீவிர பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles