செம்மணியில் எழுந்தமானமாக வெட்டிய குழியிலும் மனித எலும்புக் கூடுகள் அடையாளம்

செம்மணி – அரியாலை சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன.

அதேவேளை எழுந்தமானமாக தோண்டப்பட்ட குழிகள் இரண்டில் ஒரு குழியில் இருந்து மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரையிலான 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 515 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 506 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 47ஆவது நாளான நேற்றைய தினம் சனிக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles