பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தேர்தலுக்கு எதிரான போராட்டங்களில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீரில் செயல்படும் அவாமி ஆக்ஷன் கமிட்டி, கடந்த மாதம் நடைபெற்ற மூன்று கட்டத் தேர்தலின் முதல் கட்டத்திலிருந்து பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என கூறியுள்ளது.
துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தல் ஒரு மோசடித் தேர்தல் என்று கூறி, தேர்தலைப் புறக்கணிக்குமாறும் அவாமி ஆக்ஷன் கமிட்டி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தற்போதைய தேர்தல் நியாயமான அல்லது ஜனநாயக முறையில் நடத்தப்படாது என்றும், தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்படும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் சட்டபூர்வ அங்கீகாரம் இருக்காது என்றும் அவாமி ஆக்ஷன் கமிட்டி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீர் தேர்தலின் முதல் கட்டம் ஜூலை 27-ஆம் திகதியும், இரண்டாம் கட்டம் ஜூலை 1-ஆம் திகதியும் நடைபெற்ற நிலையில், இறுதிக் கட்டம் 10-ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
