செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் புதன்கிழமை இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் 109 வது நாள் அகழ்வு பணிகள் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுப்பட்டன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 10 எலும்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு பணிகளின் போது, 582 எலும்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கூட்டாக காணப்பட்ட மூன்று எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் சான்று பொருளாக தாயத்து, நாணயம் , சிறு இரும்புத்துண்டும் மீட்கப்பட்டுள்ளன.
