ரொறன்ரோவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி!

கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள நார்த் யார்க் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1:24 மணியளவில், சேதமடைந்த வாகனம் ஒன்று அபாயகரமான முறையில் இயக்கப்படுவதாகக் கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் அல்சன் வீதிக்கு கிழக்கே உள்ள வில்சன் மற்றும் கிங் ஹை ஏவென்யூ பகுதிக்குச் சென்றுள்ளனர்.

விபத்துக்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், கைத்துப்பாக்கியை வைத்திருந்த நபரை எதிர்கொண்டனர்.

இதன்போது ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து டிராம் மேகசின் கொண்ட கையடக்கத் துப்பாக்கி உட்பட குறைந்தபட்சம் இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரின் நடவடிக்கையினால் மரணம், தீவிர காயம் அல்லது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஏற்படும் போது விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU), இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்காக 4 முதன்மை விசாரணையாளர்களும், 3 தடயவியல் விசாரணையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles