அன்டி பர்ன்ஹாம் பிரித்தானிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக , உக்ரைன் தலைநகர் கிவ்விற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கின்றார்.
உக்ரைனின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், அந்நாட்டிற்கான பிரித்தானியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளார்.
முன்னாள் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் காலத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளால் உருவாக்கப்பட்ட “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி” (Coalition of the Willing) அமைப்பின் முதல் கூட்டத்திற்குப் பிரதமர் அன்டி பர்ன்ஹாம் லைமை தாங்குவார்.
மேலும், உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டி, பிரித்தானிய மக்கள் சார்பில் வழங்கப்படும் விருதையும் அவர் ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
சமீபகாலமாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தீவிர ஏவுகணைத் தாக்குதல்களின் பின்னணியில் பர்ன்ஹாமின் இந்த விஜயம் அமைகிறது. வெள்ளிக்கிழமை வணிக வளாகம் ஒன்று மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர்.
தனது விஜயத்திற்கு முன்னதாகப் கருத்து வெளியிட்ட அன்டி பர்ன்ஹாம் , “உக்ரைனின் 35ஆவது சுதந்திர தினத்தில், பிரித்தானியா இன்று முதல் இறுதிவரை உங்களுடன் நிற்கும் என்பதில் உக்ரைன் மக்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். உக்ரைனின் பாதுகாப்புதான் எங்களது பாதுகாப்பு” என்று தெரிவித்தார்.
