சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் மேலும் 90 நாள்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை, மேலும் 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாள்கள் தடுப்புக் காவல் காலம் நிறைவடைந்த நிலையில், விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதால் மேலதிகமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சுரேஷ் சலே உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டமையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சுரேஷ் சலேவின் தடுப்புக்்காவலை மேலும் நீடிக்க வேண்டாம் என வலியுறுத்தி அவரது தாயாரும் மனைவியும் அடுத்தடுத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதங்களை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles