ஞானசாரரை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகம் முன் பிக்குகள் போராட்டம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்காததைத் தொடர்ந்து, கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.

ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிடும் வரை தமது போராட்டம் தொடரும் எனப் பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க முன்னதாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு குறைந்தது ஒரு மாத காலம் தேவைப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்ததாகப் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பதிலில் அதிருப்தியடைந்த பௌத்த பிக்குகள், ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என வலியுறுத்தியுள்ளனர்.

கடும் மழைக்கு மத்தியிலும் கொழும்பை வந்தடைந்த பிக்குகள், பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியேயுள்ள வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, பேச்சுவார்த்தையின் முடிவுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles