ஞானசார தேரர் விடுதலையை வலியுறுத்தி பிக்குமார் ஜனாதிபதி செயலக முன்றிலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்காக பிக்குமாரால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிஸாரால் இன்று(15) இரவு அகற்றப்பட்டது.
அதேசமயம் பொலிஸாரை தாக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் பிக்குமார் உட்பட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஜனாதிபதி செயலக பகுதியில் பரபரப்பு நிலைமை உருவாகியுள்ளது.
