அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கருத்தை அவர் தனது சமூக வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்.
ரோபோக்களே புதிய ரோபோக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் பட்சத்தில், அவற்றின் எண்ணிக்கையும் வளர்ச்சியும் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் அதிகரிக்கும் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் ஒரு மனித உருவ ரோபோவின் செயல்திறன் மனிதனை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அவர் கணித்துள்ளார்.
மேலும், இன்னும் ஒரு வருடத்திற்குள் செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் மனிதனின் அறிவாற்றல் திறன்களை விஞ்சிவிடும் எனவும், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நுண்ணறிவையும் செயற்கை நுண்ணறிவு மிஞ்சக்கூடும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எனினும், இவை எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எதிர்காலம் தொடர்பான கணிப்புகளே என்பதும் குறிப்பிடத்தக்கது.
