லொஸ் ஏஞ்சல்ஸில் நேரலையில் ஈடுபட்ட ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பேருந்து தீப்பிடித்த சம்பவத்தை நேரலை செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸின் சாட்ஸ்வொர்த் பகுதியில் நேற்று மாலை வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது.

இதனை என்.பி.சி. செய்தி நிறுவனத்தின் ஹெலிக்கொப்டர் நேரலை செய்துகொண்டிருந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிக்கொப்டர் இரண்டு கட்டடங்களுக்கு இடையில் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்து நேரலையின்போதே இடம்பெற்றதால், ஹெலிக்கொப்டர் கீழே விழும் காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகியது.

விபத்தில் ஹெலிக்கொப்டரில் பயணித்த விமானி மற்றும் செய்தியாளர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர் எனவும் மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாட்ஸ்வொர்த் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஹெலிக்கொப்டர் விழுந்ததால் கட்டடங்களுக்கு சேதம் ஏற்படவில்லை எனவும், நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணைக்குழு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles