ஒன்ராறியோ விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலி!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், குயெல்ஃப் நகரத்திற்கு வெளிப்புறமாக உள்ள புஸ்லிஞ்ச் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

வாட்சன் வீதி தெற்குப் பகுதியில் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனத்தில் பயணித்த ஆறு பேரில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை வளைவுக்கு முன்பிருந்த பாதுகாப்புத் தடுப்புச் சுவர் கடுமையாகச் சேதமடைந்து காணப்பட்டதுடன், அதற்கு மறுபக்கத்தில் மரங்கள் நிறைந்த பள்ளமான பகுதி காணப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனம் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

காவல்துறையின் சார்பில் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரக்கால மீட்புக் குழு மற்றும் மோப்ப நாய் படை ஆகியவற்றின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராக்வுட் காவல் நிலையத்தில் இது தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles