ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா மீண்டும் ஒன்றிணைய 56 சதவீத மக்கள் ஆதரவு

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை 56 சதவீத மக்கள் ஆதரிப்பதாக கருத்து கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.

அதே சமயம், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய வாக்கெடுப்பில் 63 சதவீதத்தினர் மீண்டும் இணைவதை ஆதரிக்கின்றனர். 34 சதவீதத்தினர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருக்கவே விரும்புகின்றனர் எனவும் குறப்பிடப்பட்டுள்ளது.

இளம் வயதினர் மற்றும் தொழிற்கட்சி (Labour Party) ஆதரவாளர்களிடையே இந்த ஆதரவு மிக அதிகமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழிற்கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் 77 சதவீதமானோர் மீண்டும் இணைவதை விரும்புகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பது பிரிட்டனின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பெரும்பான்மையான மக்கள் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles