ஜேர்மனியின் பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் முன்னெடுத்த மாபெரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
சிறந்த கல்வி வசதிகள், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் கட்டாய இராணுவச் சேவைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ‘Gen Z regelt’ என்ற இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், சில நகரங்களில் போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்கள், போத்தல்கள் மற்றும் பட்டாசுகளை வீசியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் மிளகுத் தெளிப்பைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.
இந்த மோதல்களில் பல பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
