ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது சட்டநடவடிக்கைகளுக்கு தயாராகும் சர்வதேச ஊடகங்கள்

வெள்ளை மாளிகைக்குள் நுழைய தங்களுக்குத் தடை விதித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக CNN,Politico மற்றும் MS NOW ஆகிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னையும் தனது குழுவையும் பற்றி “பொய்யான மற்றும் புனையப்பட்ட செய்திகளை” ஊடகங்கள் வெளியிடுவதாகக் குற்றம் சாட்டி, குறித்த நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்துள்ளார்.

அதன்படி, கடந்த சனிக்கிழமை முதல் பத்திரிகையாளர்களின் நுழைவு அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையைப் பாதுகாக்கவும், அரசாங்கத்திற்குத் தேவையானதை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்ற கருத்தை எதிர்க்கவும் வழக்குத் தொடர்வதாக அந்த ஊடகங்கள் கூறுகின்றன.

ABC, CBS, Fox News மற்றும் NBC ஆகிய முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

மேலும், அதிபரின் பயணங்களை செய்தி சேகரிக்கும் ஊடகக் குழுக்கள் தற்காலிகமாகத் தங்கள் சேவையிலிருந்து விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளன.

இவ்வாறான ஒரு சூழலில் தாம் பத்திரிகை சுதந்திரத்தைத் தாக்கவில்லை என்றும், போலிச் செய்திகளை மட்டுமே தாக்குவதாகவும் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles