பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிச் சென்ற தந்தை ரயில் மோதி பலி: மகள் படுகாயம்

Wrecked motorcycle on dirt beside a vine-covered wall; parts and a backpack lie nearby, with bystanders in the background.

பாடசாலை முடிவடைந்த பின்னர் தனது மகளை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தை, ரயிலுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை நண்பகல் யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆராய்ச்சிப் பணியில் அர்ப்பணிப்புடனும் சிறந்த பொறுப்புணர்வுடனும் பணியாற்றி வந்த நாகராசா சூரியகுமார் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அரியாலை புங்கன்குளம் ரயில்வே கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டபோது, அவ்வழியாகச் சென்ற ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது மகளான பாடசாலை மாணவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles